இம்மாதத் தொடக்கத்தில் ஃபேஸ்புக்கில் கறுப்பு நிற டீ-சட்டையில் சிங்கப்பூர் தேசிய கொடி கிழிக்கப்பட்டு, அதற்குப் பின்னால் இந்திய கொடி காட்டப் படும் விதமாக வரைபடக் காட்சி ஒன்றைப் பதிவிட்ட ஆடவர் தமது வங்கிப் பணியிலிருந்து நீக்கப் பட்டுவிட்டதாக டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய இந்தப் பதிவை வெளியிட்ட சிங்கப்பூர் நிரந்தரவாசி யான திரு அவிஜிட் தாஸ் பட்நாயக்கிற்கு இதன் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டதாக அவ்வங்கி நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.
"இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஊழியர்களின் நடத் தையை டிபிஎஸ் ஒருபோதும் ஏற்காது," என்று அவ்வங்கி திட்ட வட்டமாகக் கூறியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணைக் குழு ஒன்று அமைக் கப்பட்டதாகக் கூறிய டிபிஎஸ் வங்கி, "திரு பட்நாயக் தமது வங்கியில் இம் மாதம் 24ஆம் தேதியிலிருந்து ஊழியராக இல்லை," என்று சொன்னது. இந்தியாவின் சுதந்திர தினத் திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தப் பதிவு முதன்முறையாக ஃபேஸ்புக்கில் தோன்றியது. 'Singapore Indians and Expats' எனும் பக்கத்தில் திரு பட்நாயக் இந்தப் பதிவை வெளியிட்டிருந்தார். இப்பக்கத்தில் 11,000க்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். சிங்கப்பூரில் சுமார் 10 ஆண்டு காலமாக வசித்துவரும் திரு பட்நாயக், அப்பதிவில் இந்தி மொழியில் விளக்கத்தையும் அளித்திருந்தார். அதில், தமது அன்பு இன்னும் தாயகம் இந்தியாவிற்கே உள்ள தாக அவர் கூறியிருந்ததாக அறியப்படுகிறது.

