தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை: அரசு தகவல்

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை: அரசு தகவல்

1 mins read

சென்னை: கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லையோரப் பகுதிகளில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கப்படும் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் ஏற்படக்கூடிய தொற்று நோய்களைத் தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான மருந்துகள் கேரளாவுக்கு அனுப்பப்படுவதாக அவர் கூறியுள்ளார். "தமிழக சுகாதாரத் துறை சார்பில் 2.7 கோடி மதிப்புள்ள மருந்துகள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. எல்லை மாவட்டங்களில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. "திருச்சி, ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் தொற்று நோய்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டுள்ளன," என்று குழந்தைசாமி மேலும் தெரிவித்துள்ளார்.