பொங்கோலில் காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

பொங்கோலில் காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

1 mins read
ffe95c30-949b-437a-adc7-652a0b34cefa
-

பொங்கோல் உயர்நிலைப் பள்ளி அருகில் நேற்று முன்தினம் காட்டுப்பன்றி ஒன்று ஒரு பெண்ணைத் தாக்கிய சம் பவத்தைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பாதுகாப்பை வலுப் படுத்தச் சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் நிர்வாகப் பணியாற்றும் சுமார் 30களிலுள்ள பெண்ணுக்குக் காட்டுப்பன்றி தாக்கிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் அறியப்படுகிறது. மேம்பாட்டுப் பணிக்காக அழிக் கப்படும் காட்டுப்பகுதி அருகில் பொங்கோல் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

பெண்ணைத் தாக்கியபின் காட்டுப்பன்றி அருகிலிருந்த 'வாட்டர்பே' எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை குடி யிருப்புக்குள் நுழைந்தது. பின், 'ஏக்கர்ஸ்' எனப்படும் விலங்கு விவகாரங்கள் ஆய்வு மற்றும் கல்விச் சங்கத்தைச் சேர்ந்தோர் காட்டுப்பன்றியை மயக்கமுறச்செய்து, அதை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக அறியப்படுகிறது.

பொங்கோலில் காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டதால் காயமடைந்த பெண். படம்: ஃபேஸ்புக்