சட்டப்படி தவறு என்பதை அறிந் தும் பாலியல் சேவை வழங்கும் பெண்ணுக்கு வீட்டை வாடகைக்கு விட்ட சிங்கப்பூரருக்கு நேற்று நான்கு வாரச் சிறைத் தண் டனையும் 16,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. 39 வயதான ஓங் ஈ மெங், சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் சட்டவிரோதமாக தங்கியிருந்த சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்குத் தம் வீட்டைத் துணை வாடகைக்கு விட்டிருந்தார். வீட்டைப் பாலியல் சேவை வழங்குவதற்குச் சீனப்பெண் பயன்படுத்துவார் என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இவ்வாண்டு மார்ச் 11ஆம் தேதி சீன நாட்டைச் சேர்ந்த 43 வயது லியூ ஹுய் ஒரு கலைஞராக சிங்கப்பூர் வந்தார். ஆனால் பின்னர் அவர் உடற்பிடிப்பு சேவையில் ஈடுபட்டார். மார்ச் 25ஆம் தேதி அவருக்கு வழங்கப்பட்ட விசா காலாவதி யானது. அப்படியும் அவர் விதி முறைகளை மீறிச் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் தங்கினார்.
சென்ற ஏப்ரல் 26ஆம் தேதி ஓங்கின் வீட்டில் தங்கியிருந்த சீனப்பெண் கைது செய்யப்பட்டார். அதே சமயத்தில் சீனப்பெண்ணுக்கு அடைக்கலம் வழங்கிய ஓங்கும் கைதானார். ஈராண்டு காலம் பாடகராக சிங்கப்பூரில் தங்கி யிருக்க அனுமதி பெற்றிருந்ததாக லியூ தம்மிடம் கூறியிருந்ததாக ஓங் சொன்னார். ஆனால் இதனை உறுதி செய்துகொள்ள ஓங் முயற்சி எதுவும் எடுக்கவில்லை. சீனப்பெண்ணின் பாஸ்போர்ட் டையோ வொர்க் பர்மிட்டையோ அவர் சோதனையிடவில்லை. இதனால் குடிநுழைவு சட்டத் தின்கீழ் குற்றம்புரிந்தவரை வீட்டில் தங்க அனுமதித்ததற்காக ஓங் தண்டிக்கப்பட்டார். மற்றொரு நில வரத்தில் அனுமதிக்கப்பட்ட காலத் திற்குமேல் தங்கியிருந்த சீனப் பெண்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு சிங்கப்பூரிலிருந்து வெளி யேற்றப்பட்டார்.

