புதிய கண்காணிப்புச் சாதனங்கள் உருவாக்கம்

புதிய கண்காணிப்புச் சாதனங்கள் உருவாக்கம்

1 mins read
Google News Preferred Icon

எம்ஆர்டி சேவையின்போது ஏற் படும் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான, சிறிய அளவிலான சேவைத் தடைகளில் பாதிக்கும் மேற்பட்டவைக்கு ரயில் கதவு களில் ஏற்படும் கோளாறுகளே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, பரா மரிப்புப் பணிகளை மேற்கொள் வதன்மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க புதிய மாதிரிக் கண்காணிப்பு முறை சோதிக்கப் பட்டு வருகிறது. வடக்கு = தெற்கு, கிழக்கு = மேற்கு ரயில் பாதைகளில் செல் லும் ஒரு ரயிலின் கதவுகளில் ஓர் உணர்கருவி பொருத்தப்பட்டு உள்ளது. ரயில் சேவை வழங்கும் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் நன் யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும் இணைந்து இந்தக் கருவியை உருவாக்கியுள்ளன.

காற்றழுத்தம் மூலம் இயங் கும் ரயில் கதவுகள் இயக்க வேகம், காற்றழுத்தம், மின்விநி யோகம் போன்ற தரவுகளை அந்த உணர்கருவி சேகரிக்கிறது. இது, கோளாறுகளைச் சரிசெய்ய வும் எப்பொழுது கோளாறு ஏற் படும் என்பதைக் கணிக்கவும் பொறியாளர்களுக்கு உதவியாக இருக்கிறது. எஸ்எம்ஆர்டி = என்டியு அறி வார்ந்த நகர்ப்புற ரயில் பெரு நிறுவன ஆய்வகத்தில் இந்த நவீன ரயில் கதவு உணர்கருவி அமைப்பு உட்பட 13 ஆய்வுத் திட்டங்களை எஸ்எம்ஆர்டியும் என்டியுவும் இணைந்து மேற் கொண்டு வருகின்றன. ரயில் சேவை நம்பகத்தன்மையை மேம் படுத்தும் நோக்கில் கண்கா ணிப்பு, உணர்கருவி அமைப்பு களை இந்த ஆய்வகம் உரு வாக்கி வருகிறது.