பாடத்தோடு பண்புநெறிகளையும் கற்றுத் தரும் ஆசிரியருக்கு உயரிய விருது

பாடத்தோடு பண்புநெறிகளையும் கற்றுத் தரும் ஆசிரியருக்கு உயரிய விருது

1 mins read
9fd6dbe8-4147-4808-9fcd-1227c54eb737
-

ப. பாலசுப்பிரமணியம்

பாடங்களைக் கற்றுக்கொடுப்பது மட்டுமல்ல, மாணவர்களை ஆழ மாகச் சிந்திக்கத் தூண்டுவது, கேள்வி கேட்க வைப்பது, தன் னம்பிக்கை உடையவர்களாக்கு வது ஆகியவையும் ஆசிரியர் ஒரு வரின் பணிகளே என்று நம்பு கிறார் திருமதி சு.நிர்மலா தேவி, 54. கடந்த 30 ஆண்டுகளாக வகுப்பில் இதனை நடைமுறைப் படுத்தி வரும் கோங்யாங் தொடக் கப்பள்ளியின் அறிவியல் ஆசிரிய ரான இவர், நேற்று மிக உயரிய ஆசிரியர்களுக்கான அதிபர் விருதைப் பெற்றார். இஸ்தானாவில் நேற்று நடந்த ஆசிரியர் தின உபசரிப்பு நிகழ்ச்சி யில் திருமதி நிர்மலா தேவி உட் பட தலைசிறந்த எட்டு ஆசிரியர் கள் இந்த கெளரவ விருதினை அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். கடந்த 1985ல் தமது 'ஏ' நிலை தேர்வுக்குப் பிறகு பகுதி நேரமாக மார்சிலிங் தொடக்கப் பள்ளியில் சில மாதங்கள் கற்பித்த போது ஆசிரியர் பணி மீது திருமதி நிர்மலா தேவிக்கு ஈர்ப்பு வந்தது.

இதையடுத்து, அன்றைய தேசிய கல்விக் கழகத்தில் ஈராண்டு ஆசிரியர் பயிற்சியை முடித்தபிறகு 1988ஆம் ஆண்டில் யீ‌ஷூன் வட் டாரத்தில் அமைந்துள்ள சிஷான் தொடக்கப்பள்ளியில் தமது ஆசி ரியப் பணியைத் தொடங்கினார்.

கோங்யாங் தொடக்கப்பள்ளி ஆறாம் நிலை மாணவி சந்தியா சுரேசுக்கு நுண்ணோக்கி மூலம் அறிவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியை சு.நிர்மலா தேவி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்