சிங்கப்பூரின் ரயில் இயங்கும் முறை தொடர்ந்து மேம்பட்டு வருவ தாக நிலப் போக்குவரத்து ஆணை யம் நேற்று வெளியிட்ட ரயில் சேவை நம்பகத்தன்மை தகவல்படி தெரிய வருகிறது. இவ்வாண்டின் முதல் பாதியில், எம்ஆர்டி கட்டமைப்பில், ரயில் சேவையில் பெரிய அளவிலான தாமதங்களுக்கு இடையில் சரா சரியாக 574,000 கிலோ மீட்டர் தூரம் ரயில்கள் பிரச்சினையின்றி இயங்கின. இது இவ்வாண்டின் முதல் காலாண்டில் பதிவான 555,000 கிலோ மீட்டரை விடவும் கடந்த ஆண்டு முழுவதும் பதிவான 181,000 கிலோ மீட்டரை விடவும் அதிகம்.
இதில் வட்ட ரயில் பாதைதான் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. அப் பாதையில் தாமதங்களுக்கு இடை யில் சராசரியாக 1.2 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் ரயில்கள் இயங்கின. ரயில் சேவையில் 30 நிமிடங் களுக்கு மேல் பெரிய அளவிலான தாமதம் என்று வரும்போது, ரயில் முறை குறிப்பிடத்தக்க மேம்பாடு கண்டுள்ளது. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ரயில் சேவையில் அத்தகைய ஒரு தாம தம் மட்டுமே ஏற்பட்டது. முந்தைய காலாண்டில் மூன்று முறை பெரிய அளவிலான தாமதங்கள் ஏற்பட்ட ன. இந்தநிலை தொடர்ந்தால், 2010ஆம் ஆண்டுக்கு பிறகு எம் ஆர்டி கட்டமைப்பில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சேவை தாமதங்கள் பதிவாகும். என்றாலும், நடப்பு காலாண்டில், குறிப்பாக கிழக்கு=மேற்கு பாதை யில் ரயில் சேவை தாமதங்கள் அதிகரிப்பதாக தெரிகிறது. கடந்த ஆண்டு முழுவதும் எம்ஆர்டி கட் டமைப்பில் 16 பெரிய அளவிலான தாமதங்கள் ஏற்பட்டன.

