டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைய மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களில் சிலர், தங்கள் தனிப்பட்ட விவரங்கள், கடன் அட்டை தகவல்கள் போன்றவற்றைப் போலி இணையத்தளங்கள் மூலமாகவோ தொலைபேசி வழியாகவோ பகிர்ந்திருந்தனர். போலியான இணைய விளம்பரங்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றுக்குப் பதிலளித்த வாடிக்கையாளர்கள் இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதியின்றி அவர்களுடைய கடன் அட்டைகள் மூலம் பல்வேறு நாடுகளின் நாணயப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்தது. வங்கிக் கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களைக் கோரி வரும் மின்னஞ்சல்களை மிகுந்த கவனத்துடன் கையாளுமாறு சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த மே மாதம் வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது.
டிபிஎஸ், ஓசிபிசி வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
1 mins read