மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய அதிரடி சோதனைகளில் மொத்தம் 82 சந்தேப் பேர்வழிகள் சிக்கினர். தெலுக் பிளாங்கா வட்டாரத் தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த புதன்கிழமை சோதனை நடத்தப் பட்டது. போதைப்பொருள் கடத் தல்காரர் என்று சந்தேகிக்கப்படும் 25 வயது சிங்கப்பூரர் ஒருவரும் போதைப் பித்தர் என்று சந்தே கிக்கப்படும் 24 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அந்த வீட்டில் 32 கிராம் எடை கொண்ட 'ஐஸ்' எனப்படும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வீட்டில் அப்பெண்ணின் மூன்று மாதக் குழந்தையும் இருந்தது. அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தபோதும் குழந்தை பிறந்த பிறகும் போதைப்பொருள் உட்கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த குழந்தையை உறவினர் ஒருவரிடம் ஒப்படைக்க சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுடன் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இணைந்து செயல்படுகிறது.
தெந்தராம் சாலையில் போதைப்பொருள் கடத்தல்காரன் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு வனை போலிசார் நெருங்கி சரணடையுமாறு உத்தரவிட்ட போது அந்த 30 வயது சிங்கப்பூரர் பணிய மறுத்தான். மாறாக, அவன் போலிஸ் அதிகாரிகளைத் தாக்கினான். போலிசார் அவனை மடக்கிப் பிடித்துக் கைது செய் ததும் அவன் சுயநினைவு இழந் தான். அவன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டான். அவனது காரில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப் பட்டது.

