எஸ்.வெங்கடேஷ்வரன்
ஆரோக்கிய வாழ்க்கைமுறையை கடைப்பிடிக்க அரசாங்கத்தின் கொள்கைகளோடு தனிநபர் ஒவ் வொருவரின் முயற்சியும் சமூக அமைப்புகளின் முயற்சிகளும் இன்றியமையாதது என்று ஜாலான் புசார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தொடர்பு, தகவல் அமைச்சருமான டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் கூறியுள்ளார். பென்கூலன் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற சுகாதார விழா வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரி வித்தார். "நீங்கள் எந்த வயதில் இருந் தாலும் சரி, உடல்நலத்திற்கு கேடு விளை விக்கும் பழக்கங்களைக் கை விட்டு, ஆரோக்கிய பழக்கங் களைக் கையாளுவது எப்போதும் சிறந்தது.
"இதுபோன்ற சமூக அமைப்பு களின் முயற்சி, பொது மக்கள் ஆரோக்கிய வாழ்க்கை நடை முறை யைப் பின்பற்றுவதற்கு ஊக்குவி க்கும்," என்றார் டாக்டர் யாக்கூப். இந்திய முஸ்லிம் பேரவை, பென்கூலன் பள்ளிவாசல், பொதக் குடி சங்கம் சிங்கப்பூர் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தச் சுகாதார விழாவிற்கு சுகா தார மேம்பாட்டுக் கழகம், சிங் கப்பூ ர் பொது மருத்துவமனை, முஸ் லிம் சுகாதார நிபுணர்கள் கழகம் ஆகி யவை ஆதரவு வழங்கின. காலை 8.30 முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச் சியில் ஏறத்தாழ 124 பேர் கலந்துகொ ண்டனர். மருத்துவப் பரிசோத னைகள், ரத்த தானம், பெண்களுக்கா ன சிறப்பு மருத்துவக் கருத்த ரங்கம் ஆகிய அங்கங்கள் இடம்பெ ற்றன. அத்துடன் கண்பார்வை, செவிப் புலன், நீரிழிவு, ரத்த அழுத் தம் போன்ற உடல்நலப் பரிசோத னை களும் வழங்கப்பட்டன.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைத் துறையில் படிக்கும் மாணவர்கள் சுகாதார விழாவில் ரத்த அழுத்த பரிசோதனையை மேற்கொண்டனர். படம்: திமத்தி டேவிட்