'கலைப் படைப்பில் தவறான நோக்கம் இல்லை'

'கலைப் படைப்பில் தவறான நோக்கம் இல்லை'

1 mins read
acb6826f-20f4-4bdd-bb66-051ecbc1bf7d
-

கலை ஆர்வலர் சீலன் பிள்ளை, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் படைத்த தம் கலைப் படைப்பு, நீண்டகால அரசியல் கைதி சியா டைய் போவைப் பற்றியது என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். வழக்கு விசாரணையின் இரண்டாவது நாளான நேற்று, தன் கலைப்படைப்பின் தலைப் பான "32 ஆண்டுகள்: ஒரு கண்ணாடியின் விசாரணை" என்பதில் உள்ள '32' தன் வயதைக் குறிப்பதாக சீலன் கூறினார். இருப்பினும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத் தின்கீழ் 1966 அக்டோபர் மாதம் டாக்டர் சியா டைய் போ கைது செய்யப்பட்டதன் தொடர்பில் தற்போது 32 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை யில் அந்த எண்ணிக்கையைத் தான் சீலனின் கலைப்படைப் பின் தலைப்பு குறிப்பிடுகிறது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கிற்கான தீர்ப்பு அக் டோபர் மூன்றாம் தேதி அறி விக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.