சிங்ஹெல்த் ஊடுருவல்: 14 மாதங்களாக இணையப் பாதுகாப்பு மேம்பாடுகள் இல்லை

சிங்ஹெல்த் சுகாதாரக் குழுமத் தின் தரவுத்தளம் ஊடுருவப்பட்ட சம்பவத்தின் தொடர்பில், சம்பந்தப் பட்ட கணினிக் கட்டமைப்பு ஒன் றுக்கு ஓராண்டுக்கு மேல் மென் பொருள் தொடர்பான முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகள் செய்யப்பட வில்லை என்று விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில் கணினிக் கட்டமைப்புகள் பல முறை இத்தகைய மேம்பாடுகளைப் பெறும். அவ்வகையில் பாதுகாப்பு மேம்பாடு பெறாத கணினிக் கட் டமைப்பை நிர்வகித்தவர், பத்தாண் டுக்கு முன்னர் அப்பொறுப்பை ஏற் றார் என்றும் அவர் இணையப் பாதுகாப்பிலோ கணினிக் கட்ட மைப்பு நிர்வாகத்திலோ பயிற்சி பெறாதவர் என்றும் கூறப்பட்டது.

சிங்ஹெல்த் குழுமத்தின்கீழ் உள்ள தேசிய புற்றுநோய் நிலையத் தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி திரு டான் அய்க் சின் அளித்த வாக்கு மூலத்தின் வழி இது தெரிய வந் துள்ளது. தொடர் வர்த்தகம் குறித்துத் திட்டமிடுவதே தம் முக்கிய பணி யாக இருந்ததெனக் கூறிய திரு டான், தமக்கு இணையப் பாதுகாப் பிலும் கணினிக் கட்டமைப்பு நிர் வாகத்திலும் பயிற்சி அளிக்காதது பற்றி தெரிவித்ததுடன் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களைச் சமாளிப்பதற்கான தரப்படுத்தப் பட்ட இயக்க செயல்முறைகளும் தமக்குத் தரப்படவில்லை என்றும் கூறினார். சிங்கப்பூரின் பொதுச் சுகாதார நிலையங்களின் தகவல் தொழில் நுட்ப அமைப்புகளை நிர்வகிக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதாரத் தரவு அமைப்பு (ஐஎச்ஐஎஸ்) 2008ஆம் ஆண்டு அமைக்கப் பட்டது. இருப்பினும் திரு டான் நிர்வகித்த கணினிக் கட்டமைப்புகள் அவ்வமைப்புக்கு மாற்றிவிடப்படவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!