விவியன்: அமெரிக்கா-சீனா ஒத்துழைப்பு தென்கிழக்காசிய வளப்பத்துக்கு முக்கியம்

விவியன்: அமெரிக்கா-சீனா ஒத்துழைப்பு தென்கிழக்காசிய வளப்பத்துக்கு முக்கியம்

1 mins read
b384d2a9-48f6-47ac-9718-d71da406cf6d
-

இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகமயமாதல், தடையற்ற வர்த் தகம், பொருளியல் ஒருங்கிணைப்பு ஆகிய விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா சிந்தித்து, செயல்படுத்தியுள்ளது அனைவரும் அமைதியும் செழிப்பும் பெற வழி செய்துள்ளது. இருப்பினும் இந்த விவ காரங்கள் ஒரு பன்முனை உலகம் உருவாகி வரக் காரணங்களாக அமைவதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நியூயார்க்கில் நடை பெற்ற கூட்டத்தில் கூறினார். அத்தகைய பன்முனை உலகை நோக்கிச் செல்லும் பயணம் அமை திப் பயணமாக அமையுமா என் பதே கேள்வி என டாக்டர் விவியன் ஆசிய பசிபிக் கொள்கைக் கழ கத்தில் சொன்னார். கழகத்தின் தலைவரும் ஆஸ் திரேலியாவின் முன்னாள் பிரத மருமான திரு கெவின் ரட்டுடன் நடந்த கலந்துரையாடலின்போது 'தென்கிழக்காசியாவுக்கான புதிய யதார்த்தங்கள்' என்ற கருப்பொருளில் இருவரும் பேசினார் கள். அதன் தொடர்பில் மின் னிலக்கப் புரட்சி, பாதுகாப்புவாதம், வல்லரசு நாடுகளுக்கிடையே போட்டி ஆகியவற்றை அடையாளம் கண்டு டாக்டர் விவியன் பேசினார்.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்