மக்கள் உயிர்வாழும் ஆண்டுகள் அதிக ரித்துவருவதும் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் 65 வயதுக்கு மேற்பட்ட முதிய சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்துள்ளது. இது கடந்த பத்தாண்டுகளைக் காட்டிலும் வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 1950க்கும் 1964க்கும் இடைப் பட்ட காலத்தில் பிறந்தவர்கள் இப்போது 65 வயதைத் தாண்டியி ருப்பார்கள் அல்லது அதை நோக்கி சென்று கொண்டிருப் பார்கள். 2017க்கும் 2018க்கும் இடைப் பட்ட காலத்தில், 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்கள் விகிதம் 14.4%ல் இருந்து 15.2%ஆக உயர்ந்தது. 2007ஆம் ஆண்டில் இந்த விகிதம் 9.4% ஆக இருந்தது. கடந்த ஆண்டில் 41.3 ஆண் டுகளாக இருந்த குடிமக்களின் இடைநிலை வயது இப்போது 41.7 ஆண்டுகளாக அதிகரித் துள்ளது.
தற்போது, 20க்கும் 64 வய துக்கும் இடைப்பட்ட, வேலை காலத்தைத் தாண்டி பணி யாற்றுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு குடிமகனுக்கு 4.2 குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இது 2008ஆம் ஆண்டில் இருந்த 6.7 குடிமக்கள் விகி தத்தைவிடக் குறைவு. 80 அல்லது அதற்கு மேற்பட்ட வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கையும் கடந்த பத் தாண்டுகளில் இரட்டிப்பாகி உள் ளது. 2008ல் 59,000 ஆக (1.9%) இருந்த இப்பிரிவினர், 2013ல் 80,000 (2.4%) ஆகவும் 2017ல் 98,000 (2.9%) ஆகவும் இந்த ஆண்டில் 104,000 (3.0%) ஆக வும் அதிகரித்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

