குழந்தைகள் பிறப்பு மூன்று ஆண்டுகளில் ஆகக் குறைவு

குழந்தைகள் பிறப்பு மூன்று ஆண்டுகளில் ஆகக் குறைவு

1 mins read
77bb1766-1b67-4f3b-b256-4f55d2b2426d
-
Google News Preferred Icon

சிங்கப்பூர் பெற்றோர்களுக்கு 2017ஆம் ஆண்டில் பிறந்த குழந் தைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் குறைந்தது ஒரு குடிமக்கள் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் எண் ணிக்கை 32,356. 2016ஆம் ஆண்டில் 33,167 குழந்தைகள் பிறந்தன. கடந்த 10 ஆண்டுகளில் பிறந்த குழந்தை களின் பிறப்பு ஆண்டுக்கு சராசரி யாக 32,200 ஆக இருந்தது என்று பிரதமர் அலுவலகத்தின் உத்திபூர்வக் குழு நேற்று வெளி யிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருந்தது. 2016ல் 1.2 புள்ளிகளாக இருந்த மொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் கடந்த ஆண்டில் 1.16 புள்ளிகளுக்குச் சரிந்தது. புதிய குடியேறிகளைச் சேர்க்கா மல் சிங்கப்பூரின் மக்கள் தொகை மீண்டு வருவதற்கு பெண்கள் சரா சரியாக 2.1 விகிதம் குழந்தைக ளைப் பெற வேண்டியுள்ளது. "இது 2017ம் ஆண்டில் 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளம் சிங்கப்பூரர்கள் குழந்தைபேறு வயதை எட்டியிருந் தாலும் இன்னும் குழந்தைபேற்றை அடையாமல் இருப்பதே இதற்கு காரணம்," என்று அறிக்கை கூறியது. ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்