சிங்கப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் இப் போது ஒற்றையராக வாழும் பெண் களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எல்லா வயதுப் பிரிவுகளி லும் இந்த உயர்வு காணப்படுவதாக நேற்று வெளியிடப்பட்ட வருடாந்திர மக்கள்தொகை அறிக்கை தெரி விக்கிறது. குறிப்பாக, 25 முதல் 29 வய துக்குட்பட்ட பெண்களிடத்தில்தான் ஒற்றையர் விகிதம் அதிகமாக உள்ளது. 2007ஆம் ஆண்டில் 60.9 விழுக்காடாக இருந்த அவ்விகிதம் 7.2 விழுக்காட்டுப் புள்ளிகள் கூடி, கடந்த ஆண்டு 68.1 விழுக்காடாக அதிகரித்தது.
அதேபோல, 30 = 39 வயதுப் பிரிவு பெண்களில் ஒற்றையர் விகிதம் 3.9 விழுக்காட்டுப் புள்ளி கள் கூடி 32.8% ஆனது. 40=44 வயதுடைய பெண்களில் 18.1 விழுக்காடாக உயர்ந்தது. இது, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த தைக் காட்டிலும் 3.8% அதிகம். ஆண்களைப் பொறுத்தமட்டில், 25 முதல் 29 வயதுக்குட்பட்டோரில் தான் அதிகமானோர் திருமணம் செய்யாமல் உள்ளனர். பத்தாண்டு களுக்குமுன் 77.5 விழுக்காடாக இருந்த அவ்விகிதம் 2017ஆம் ஆண்டில் 80.7 விழுக்காடாக உயர்ந்தது. இந்த அதிகரிப்பு 35 முதல் 49 வயதுக்குட்பட்ட ஆண்களிடத்திலும் காணப்பட்டது. அந்த உயர்வு 0.3 விழுக்காட்டிற்கும் 1.2 விழுக்காட்டிற் கும் இடைப்பட்டதாக இருந்தது.ST PHOTO: KUA CHEE SIONG

