குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரி சின் பெங் சம் (படம்), இரு சீன நாட்டுப் பெண்களிடமிருந்து பாலியல் சேவைகளை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, அவர்களின் சிறப்பு அனுமதி தேதியை நீட்டித்தார். அத்துடன் பாலியல் செயல், குடிநுழைவு தொடர்பான குற்றங்களுக்காகக் கைதாகாமல் இருக்க, அதிகாரிகள் நடத்தவிருக்கும் சோதனை குறித்து முன்கூட்டியே அப்பெண்களுக்கும் மேலும் இருவருக்கும் தகவல் தெரிவித்தார். இத்தகவலை வெளியிடும் அதிகாரம் அவருக்கு இல்லை. அலுவல்முறை ரகசியங்கள் சட்டத்தின்கீழ் தவறான தகவலைத் தெரிவித்ததற்காக 13 குற்றச்சாட்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாலியல் தேவைக்காக லஞ்சம் பெற்ற நான்கு குற்றச்சாட்டுகள் உள்பட நேற்று மொத்தம் 33 குற்றச்சாட்டுகள் 51 வயது சின்மீது கூறப்பட்டன. இதன் தொடர்பில் சின், குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையத்தால் கால வரையறையின்றி தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை அக்டோபர் 25ஆம் தேதி தொடரும்.
பாலியல் சேவைகளை லஞ்சமாக பெற்ற அதிகாரி மீது குற்றச்சாட்டு
1 mins read

