மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

1 mins read
86bd7d73-ede5-4b89-8c92-7f17573c496c
-
Google News Preferred Icon

மலேசியாவில் தயாரிக்கப்பட்ட Jus Al Sunnah பழச்சாறு வகை களை உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊக்க மருந்து கலக்கப்பட்ட அந்தப் பழச்சாறு வகைகளை அருந்திய குழந்தை உட்பட ஐவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆணை யத்தின் எச்சரிக்கை வந்துள்ளது. அவற்றில் அனுமதிக்கப்படாத ஊக்க மருந்துப் பொருட்கள் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இத்தகைய ஊக்க மருந்துகளை நீண்டகாலம் உட்கொண்டால் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சி னைகள் ஏற்படக்கூடும். ஊக்க மருந்து கலக்கப்பட்ட இந்தப் பழச்சாறு வகைகளின் விற் பனையை உடனடியாக நிறுத்து மாறும் விற்பனையாளர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இரு பழச்சாறு வகைகளை உட்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. படம்: எச்எஸ்ஏ