தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்1 பங்குகளை வாங்க எஸ்பிஎச், கெப்பல் கூட்டு முயற்சி

1 mins read
b92ab696-dcdc-4103-9457-e3c3ef5b1805
-

கெப்பல் கார்ப் லிமிட்டெட் நிறுவன மும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனமும் இணைந்து எம்1 தொலைத்தொடர்பு சேவை நிறு வனத்தின் மீதமுள்ள பங்குகளை ஒரு பங்குக்கு $2.06 என்ற விலையில் வாங்க முடிவெடுத்து உள்ளன. எம்1-=இல் 13.45 பங்குகளை எஸ்பிஎச் ஏற்கெனவே பெற்றுள்ளது. சிங்கப்பூரின் மூன்றாவது ஆகப்பெரிய கைத்தொலை பேசி சேவை வழங்கும் நிறுவனமான எம்1-=இன் மதிப்பு கிட்டத்தட்ட $1.91 பில்லியன் எனக் கணிக்கப்படுகிறது. இணை கூட்டு முதலீட்டு நிறுவனமான கனெக்ட்டிவிட்டி பிரைவேட் லிமிட்டெட் மூலம் இந்தக் கொள்முதல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பெருமளவிலான பங்குகளை கெப்பல் கார்ப் லிமிட்டெட் வைத்துள்ளது.