உபகாரச் சம்பளங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

உபகாரச் சம்பளங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

1 mins read

தொடக்கப்பள்ளி ஒன்று முதல் மூன்று வரை பயிலும் மாணவர்களுக்கான உபகாரச் சம்பளம், மதிப்பெண்களை அடிப்படையாகக் கொள்ளாமல் அவர்களின் கற்றல் மனப்போக்கை மதிப்பிட்டு வழங்கப்படவுள்ளது. பள்ளி தேர்வை அடிப்படையாகக் கொள்வதைக் குறைக்கும் நோக் கத்தில் இந்த மாற்றம் இடம் பெறுகிறது. வருடாந்திர வேலைத் திட்ட கருத்தரங்கில் கல்வி அமைச்சு புதிய மாற்றங்கள் குறித்து பள்ளிகளின் தலைவர் களிடம் அறிவித்தது. தொடக்கப் பள்ளி ஒன்று, தொடக்கப்பள்ளி இரண்டு ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உபகாரச் சம்பளத்திற்கான ஏட்டுக் கல்வித் தகுதிநிலை மாற்றப்படும் என்று கல்வியமைச்சு தெரி வித்தது.

தொடக்கப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு கொடுக் கப்படும் நல்ல முன்னேற்ற விருதுக்கான தகுதி நிலையும் மாற்றப்படும் என்றும் கூறப் படுகிறது. தொடக்கநிலை ஒன்று, இரண்டு ஆகியவற்றுக்கான ஆண்டிறுதித் தேர்வை அகற்று வதால் ஏற்படும் நிர்வாக இடையுறுகளை கல்வியமைச்சு களையும் என்று அதன் அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்திருக்கிறார். ஏட்டுக்கல்வியில் மாணவர்கள் பெறும் வெற்றியை இந்த விருதுகள் கொண்டாடுவதால் இவற்றை தொடர்ந்து வைத்தி ருப்பது அவசியம் என்று அவர் தெரிவித்தார். இந்த மாற்றங்கள் அடுத்த ஆண்டு முதல் செயல் படுத்தப்படும்.