புதுப் பொலிவூட்டப்பட்ட ஃபூனான் கடைத்தொகுதியும் அலுவலகங் களும் திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாக திறக்கப்படும். அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண் டுக்குள் இந்தக் கடைத் தொகுதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் அதிநவீன முக அடையாள தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்படும். எஸ்கோட் ஹோட்டல் நிறுவ னத்திற்குச் சொந்தமான இங்கு உள்ள தங்குமிட பகுதி, 2020க்குப் பதிலாக அடுத்த ஆண்டின் நாலாவது காலாண்டில் திறக்கும். ஆறு மாடிகளைக் கொண்ட புதிய ஃபூனான் கடைத்தொகுதிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதைக் குறிக்கும் நிகழ்ச்சியின்போது கடைத் தொகுதியின் உரிமை யாளரான 'கேப்பிடலாண்ட் மால் டிரஸ்ட்' சொத்து நிறுவனம் நேற்று தெரிவித்தது.
வழக்கமான முறையில் மட்டு மின்றி இணைய முறையையும் கொண்டு இயங்கும் சிங்கப்பூரின் முதல் கடைத்தொகுதியாக ஃபூனான் திகழப்போவதாக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் இந்நிகழ்ச்சியில் கூறினார். உணர் கருவிகளைக் கொண்ட அமைப்பு, தரவு ஆய்வுத் தொழில் நுட்பம், முக அடையாளத் தொழில் நுட்பம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வாடிக்கையாளர்களின் விருப்ப ங்களுக்கு வழக்கங்களும் ஆரா யப்படும் என்று கேப்பிடலாண்ட் நிறுவனம் தெரிவித்தது. வாடிக்கையாளர்களை வழி காட்டும் தொடுதிரை ஒன்று கடைத்தொகுதிக்குள் அமைக் கப்படும்.
வரும் வாடிக் கையாளர்கள் ஆணா பெண்ணா என்பதை கேமராக்கள் வாயிலாக அடை யாளம் கண்டு அவர்களது தனிப்பட்ட விருப்பங்களை கணிப்பதே புதிய தொழில்நுட்ப முறையின் நோக்கம். ஆயினும், வாடிக்கையாளர் களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படமாட்டா என்று கேப்பிடலாண்டின் தலைமை நிர் வாக அதிகாரி வில்சன் டான் தெரிவித்துள்ளார். 'ஃபூனான் டிஜிட்டலைஃப் மால்' என முன்னதாக அழைக் கப்பட்ட அந்த கடைத்தொகுதி, ஜூலை 2016ஆம் ஆண்டில் மூடப்பட்டது. இதன் மறு வடிவத்திற்காக கிட்டத்தட்ட $560 மில்லியன் செலவு செய்யப்பட்டது.

