சைக்கிள் பகிர்வு சேவை;ஆறு நிறுவனங்களுக்கு அனுமதி

சைக்கிள் பகிர்வு சேவை;ஆறு நிறுவனங்களுக்கு அனுமதி

1 mins read

சிங்கப்பூரில் சைக்கிள் பகிர்வு சேவையை நடத்த ஆறு நிறுவனங்களுக்கு உரிமம் பெற நிலப் போக்குவரத்து வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. சீன நிறுவனங்கள் 'மோபைக்', 'ஓஃபோ' சிங்கப்பூரைத் தள மாகக் கொண்ட 'எஸ்ஜி பைக்' ஆகியவற்றுக்கு முழு அளிவிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 'எனிவீல்', 'கிராப் சைக்கிள்' 'சீசீ சீசியாங்' ஆகியவற்றுக்கு சோதனை முறையில் அனுமதி வழங்கப் பட்டிருந்தது. சைக்கிள் பகிர்வு சேவையில் போதுமான அனுபவம் இல்லாத நிறுவனங்களை நோக்கமாகக் கொண்டு இத்தகைய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஆயிரம் சைக்கிள் களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. அதே சமயத்தில், முழு அளவு உரிமத்திற்கான அனு மதியைப் பெற்றுள்ள 'மோபைக்', 'ஓஃபோ' ஆகிய இரண்டு நிறுவனங்கள் 25,000 சைக் கிள்களுடன் சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஜி பைக் மூவாயிரம் வரையில் இரண்டு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தி சேவைகளை வழங்க முடியும். சோதனை அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டுள்ள மூன்று நிறுவனங்களின் செயல்பாடுகளை நிலப்போக்குவரத்து வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும். அதன் பிறகு, அந்நிறுவனங் களுக்கு முழு அளவிலான உரிமம் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். எனிவீல், கிராப் சைக்கிள் ஆகிய இரண்டும் தலா ஆயிரம் சைக்கிள்கள் வரை சேவைக்குப் பயன்படுத்தலாம்.