அதிக சிங்கப்பூரர்களுக்கு செந்தோசாவில் இலவச நுழைவு

அதிக சிங்கப்பூரர்களுக்கு செந்தோசாவில் இலவச நுழைவு

1 mins read
Google News Preferred Icon

வரும் திங்கட்கிழமை முதல் மேலும் அதிகமான சிங்கப்பூரர் கள் செந்தோசாவுக்குக் குறைந்த கட்டணத்திலோ இலவசமாகவோ செல்ல முடியும். சிறப்புப் பேருந்து களில் செல்லும் சமூக, பள்ளிக் கூட குழுக்கள் வார நாட்களில் இலவசமாகச் செந்தோசாவுக்குள் நுழையலாம். பொது விடுமுறை களில் அச்சலுகை கிடையாது என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. சமூகத்தோடு செந்தோசா தீவை ஈடுபடுத்தும் நடவடிக்கை களின் ஒரு பகுதி இது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சைக்கிளோட்டிகள், தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன் படுத்துவோர், குழந்தைகளுக் கான டிரான்ஸிட்லிங்க் சலுகைப் பயண அட்டையை வைத்திருப் போர் ஆகியோருக்கு அக்டோபர் 1 முதல் கட்டணம் இல்லை. தற்போது செந்தோசாவின் சைக்கிள் பாதையைப் பயன்படுத் தும் சைக்கிளோட்டிகளுக்கும் தனிநபர் நடமாட்டச் சாதன ஓட் டுநர்களுக்கும் 2 வெள்ளி கட் டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேபோல செந்தோசா எக்ஸ் பிரஸ் மோனோரயிலில் செல்ல குழந்தை சலுகை பயண அட்டை வைத்திருப்போரிடம் 4 வெள்ளி வசூலிக்கப்படுகிறது. மூத்த குடிமக்கள், உடற்குறை உள்ளோர் போன்றோர் உள்ளிட்ட சிலருக்கு திங்கட்கிழமை முதல் பாதிக் கட்டணம்.