செம்பவாங் ஆகாயப்படை தளத்தில் தேசிய சேவையாளர் மரணம்

செம்பவாங் ஆகாயப்படை தளத்தில் தேசிய சேவையாளர் மரணம்

1 mins read

சிங்கப்பூர் ஆயுதப் படைகளைச் சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர், செம்பவாங் ஆகாயப்படை தளத்திலுள்ள தனது அலுவலகத்தில் கயிற்றில் தொங்கியவாறு காணப்பட்டார். 706வது படைப்பிரிவில் அவர் போக்குவரத்து அதிகாரியாகப் பணியாற்றினார். சம்பவ இடத்தில் அவர் மாண்டதை மருத்துவ அதிகாரி ஒருவர் காலை 8.31 மணிக்கு உறுதி செய்தார். இறந்த சேவையாளரின் குடும்பத்தினருக்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவிப்பதாக தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படையும் கூறின. சம்பவத்தை போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.