$140,000 மதிப்பிலான போலி பொருட்களை விற்றவர் கைது

$140,000 மதிப்பிலான போலி பொருட்களை விற்றவர் கைது

1 mins read
Google News Preferred Icon

சொகுசு கைக்கடிகாரங்கள் எனக் கூறி போலியான பொருட்களை இணையத்தில் விற்ற சந்தேகத்தில் பேரில் காவல்துறையினர் 38 வயது ஆடவரைக் கைதுசெய்து உள்ளனர். புக்கிட் தீமா பகுதியில் கடந்த வியாழக்கிழமை குற்றவியல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதி காரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் அந்தச் சந்தேக ஆடவர் கைதுசெய்யப்பட்டார். இதில் கைக்கடிகாரங்கள், இதர பொருட்கள் உள்ளிட்ட 255 பொருட்களை அதிகாரிகள் கைப்- பற்றினர். இவற்றின் மதிப்பு $140,000க்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் போலி பொருட்களை அந்த ஆடவர் உள்ளூரிலும் வெளி- நாடுகளிலிருந்தும் பெற்றதாக அதிகாரிகள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.