சாலையைக் கடப்பது என்பது பெரும்பாலானோருக்கு இயல்பான ஒன்றாக இருக்கலாம். ஆனால் சிறப்புத் தேவைகளுடைய சிறுவர்- களுக்கு அது கற்றுக்கொடுக்க வேண்டிய ஒரு திறனாக உள்ளது. அவர்களுக்கு இதனைச் சொல்- லித்தர பரபரப்பான சாலை சந்திப் புக்கு அவர்களை அழைத்துச் செல்வது என்பது சுலபமான காரி யமல்ல. உண்மைநிலைச் சூழலுக்குச் சிறு- வர்களை அழைத்துச் செல்வதற்கு முன்பாக, பாதுகாப்பான சூழலில் அவர்களுக்கு இத்தகைய வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்- கொடுக்க மெய்நிகர் தொழில் நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்- பட்டுள்ளது. சிறப்புத் தேவைகள் உடையோருக்கான சங்கம் (ஏபி- எஸ்என்) சாவ்யாங் பள்ளி இதனை நேற்று காட்சிப்படுத்தியது.
வாழ்க்கைத் திறன்களைக் கற்றுத் தரும் சிறப்புத் தேவை உடையோருக்கான பள்ளி
1 mins read

