கலவரம் செய்ததாக ஏழு இளையர்கள் மீது குற்றச்சாட்டு

1 mins read

சிங்கப்பூர் சிறுவர் இல்லத்தில் நிகழ்ந்த அடிதடி சம்பவத்தின் தொடர்பில் ஆயுதம் ஏந்தி கல- வரத்தில் ஈடுபட்டதற்காக ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாக சமுதாய, குடும்ப மேம்- பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரி வித்துள்ளார். எஞ்சிய எழுவர் காவல்துறையினரின் விசாரணைக்கு உதவி வருகின்- றனர் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இளை யர்கள் 14க்கும் 17 வய- துக்கும் இடைப்பட்டவர்கள். கல வரம் செய்ததாக சிறுவர் இல்- லத்தில் 14 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களுக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டது. கைதுசெய்யப்பட்டவர்கள் இளம் வயதினர் என்பதால் அவர்களது அடையாளங்கள் வெளியிடப்பட வில்லை.

இந்த அடிதடி சம்பவத்தில் இலேசாக காயமடைந்த இல்- லத்தின் இரண்டு இளைய வழி காட்டி அதிகாரிகளும் துணைக் காவல் அதிகாரியும் சிகிச்சைக்காக இங் டெங் ஃபோங் மருத்துவ- மனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட னர். விளையாட்டுச் சாதனங்களால் அதிகாரிகளை இளையர்கள் தாக்- கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர் நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். எஞ்சிய அதிகாரியும் துணைக் காவல் அதிகாரியும் மருத்துவ- மனையிலிருந்து நேற்று வீடு திரும் பினர். இச்சம்பவத்தில் உதவி நாடி தங்களுக்கு நேற்று முன்தினம் மாலை 5.51 மணிக்கு அழைப்பு வந்தததாக போலிஸ் தெரிவித்தது.