'வளர்தமிழ்' வளர்க்கும் தமிழ்

2 mins read
2249929a-5a96-41bf-9221-b6b3f2989723
-

இர்ஷாத் முஹம்மது

சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள இடமும் சிறப்பு களும் வேறெந்த நாட்டிலும் இல்லா தவை. இந்நாட்டின் நான்கு அதி காரத்துவ மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழிக்கு மகுடம் சூட்டப்பட் டுள்ளது. இருமொழிக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்திவரும் நமது அரசாங்கம், தொடர்ந்து பல வகைக் களில் மொழியின் செழிப்பான வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கி வரு கிறது.

சிங்கப்பூரில் தமிழ்மொழி ஒரு வாழும் மொழியாக நிலைத்திருப் பதில் சமூகத்தின் பங்கும் முக்கிய மானது. படிப்பு, வேலை, வாழ்க்கைச் சூழல்களுக்கிடையே மொழியைப் போற்றி, வளர்த்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது நமது சமூ கம். சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்தது முதலே தமிழ்மொழி இச்சிறிய நாட்டில் முக்கிய இடம்பிடித்து வந்துள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கும் காலத் தின் தேவைக்கும் ஏற்ப தமிழ் மொழியின் பயன்பாடு மாறிவந்துள் ளது. தமிழ்ச் சமூகத்தில் தமிழ் முதல் மொழியாகப் புழங்கப்பட்ட காலத்தில், தொடர்புக்கு, தகவல் அறிய, பொழுதுபோக்க என அனைத்திலும் தமிழ் முதன்மையாக இருந்தது. தமிழ்ப் பள்ளிகளில் தமிழை மாணவர்கள் முதல்மொழி யாகப் படித்தனர். 1950களில் தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்கள் தலைமையில் தமிழர் திருநாள் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அது அன் றைய தேவை.

அதன்பின், தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் தலைமுறை யினர் காலத்தில், தொடர்புமொழியாக ஆங்கிலம் ஆகிவிட்ட நிலை யில், தமிழ் மொழியின் தேவையும் பயன்பாடும் மாறிவிட்டது. இந்நிலையில், மொழியை வாழும் மொழியாக நிலைத்திருக்கச் செய்யும் சமூகத்தின் முயற்சிகளை முடுக்கிவிடவும் அவற்றை வழிப் படுத்தவும் அரசாங்கத்தின் நிதி ஆதரவுடன் தொடங்கப்பட்ட ஓர் அமைப்புதான் வளர்தமிழ் இயக் கம்.