ஐநா பொதுச் சபை உரையில் மூன்று முக்கிய அம்சங்கள்

1 mins read
278e45b9-ed39-489a-a694-8302e6348568
-

தாராள வர்த்தகம், பலதரப்பு ஏற்பாடு, கணினித் தொழில்நுட்பம் ஆகிய மூன்றுமே ஐநா பொதுச் சபையில் தாம் ஆற்றிய உரையில் முக்கிய அக்கறைக்குரிய அம்சங்க ளாக இருந்தன என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ் ணன் சிங்கப்பூர் ஊடகத்திடம் தெரிவித்தார். ஐநா பொதுச் சபையில் அமைச் சர் விவியன் உரையாற்றிய பிறகு சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பாலகிருஷ்ணன், பலதரப்பு ஏற்பாடு இப்போது ஒரு திருப்புமுனையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

ஒருதரப்பு நிலை அதிகரிப்பது குறித்து கவலை கூடி வருவதாகத் தெரிவித்த அமைச்சர், பெரும் வல் லரசு தனது விருப்பத்தை திணிக் கக்கூடிய ஓர் உலகிற்கு எல்லாம் திரும்பிக்கொண்டு இருக்கிறது என்ற கவலை நிலவுவதாகக் கூறி னார். அத்தகைய ஓர் உலகில் சிறிய நாடுகள், பெரிய நாடுகளின் கைப் பாவையாகத்தான் இருக்கவேண்டி வரும் என்றார் அவர். ஐநா சபையில் பல நாடுகளும் பலதரப்பு ஏற்பாட்டை தற்காத்து பேசியதாகவும் டாக்டர் பால கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பலதரப்பு ஏற்பாட்டுக்குத் தோள்கொடுப்பதே சிங்கப்பூரின் நிலை என்று அமைச்சர் தெரிவித்தார். ஆசியான் பேராளர்கள், பசிபிக் கூட்டணி அமைப்பின் பேராளர்கள், தென் அமெரிக்க நாடுகளின் பேராளர்களுடன் டாக்டர் விவியன் பேச்சு நடத்தினார். அத்தகைய சந்திப்புகளின் போது அந்த நாடுகளின் பேரா ளர்கள், தாராள வர்த்தகத்தை வலியுறுத்தியதாக அமைச்சர் கூறி னார்.

ஐக்கிய நாட்டு பொதுச் சபையில் உரையாற்றிய பிறகு சிங்கப்பூர் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். PHOTO: NYTIMES