சிங்கப்பூரின் குறைவான குழந்தை பிறப்பு விகிதத்தின் தொடர்பில் ஆய்வு ஒன்றை நடத்தத் திட்ட மிடுவதாக 'ஐ லவ் சில்ட்ரன்ட்' (ஐஎச்சி) என்ற தொண்டூழிய அமைப்பு அறிவித்து உள்ளது. சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் ஏழு ஆண்டுகளில் இல் லாத அளவுக்கு 1.16க்குக் குறைந்ததாகக் குறிப்பிடும் வரு டாந்திர அறிக்கை ஒன்று வெளி யிடப்பட்டதை அடுத்து 'ஐஎச்சி' இதனைத் தெரிவித்தது. ஆய்வில் பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட் டுள்ளதாக இந்த அமைப்பு கூறியது.
குழந்தைப் பேறு குறித்த சுகா தார விழிப்புணர்வு, அதற்கான சிகிச்சை பற்றிய மாறிவரும் கருத்துகள், அந்த சிகிச்சையின் செலவுகளைக் குறைப்பது, குழந்தைப் பெற முடியாத நிலையை நோய் என வகைப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு ஆகியவை ஆரா யப்படும். சிங்கப்பூரின் குழந்தைப் பேறு பிரச்சினைக்கான பல்வேறு சிகிச்சை முறைகள், இவற்றுக் கான கட்டணக்கழிவுகள், தனி யார், பொது மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சைகளுக்கான காத் திருப்பு நேரங்கள் ஆகியவை குறித்தும் ஐஎச்சி ஆராயும்.