மருத்துவ உதவியாளர்களுக்கான அனைத்துலகப் போட்டியில் வெற்றி

மருத்துவ உதவியாளர்களுக்கான அனைத்துலகப் போட்டியில் வெற்றி

1 mins read
Google News Preferred Icon

ஆஸ்திரேலியாவில் நடந்த வருடாந்திர ஃபெர்நோ மருத்துவ உதவியாளர் பாவனைப் பயிற்சி சவாலில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் அணி வென்றது. கோல்ட் கோட்ஸ் நகரில் கடந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில், நான்கு உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூர் அணி, மற்ற நாடுகளைச் சேர்ந்த ஐந்து அணிகளை வென்றது. அனைத்துலகப் போட்டி ஒன்றில் மூன்றாவது முறையாக பங்கேற்கும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த அணி, முதன்முறையாக இத்தகைய போட்டியில் வென்றுள்ளது. இந்தப் போட்டிக்காக குறைந்தது 60 விபத்துச் சூழல் களுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டதாகப் போட்டியாளர்கள் கூறினர்.