கைகளால் மட்டும் செய்யப்படும் இதய இயக்கமீட்பு சிகிச்சைக்கான கூடம்

கைகளால் மட்டும் செய்யப்படும் இதய இயக்கமீட்பு சிகிச்சைக்கான கூடம்

1 mins read

கைகளால் மட்டும் செய்யப்படக்கூடிய இதய இயக்கமீட்பு சிகிச்சையைப் பற்றி விளக்கும் கூடங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய கூடங்கள் ஆசியாவில் முதன்முதலாக இங்கு அமைக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் இதய அறநிறுவனம் சிங்கப்பூர் உயிர்மீட்பு, முதலுதவி மன்றத்துடன் இணைந்து இந்தக் கூடங்களைத் திறந்துள்ளது. இந்தக் கூடங்களில் பொதுமக்கள் சுயமாகவே, இந்த உயிர்காப்பு முறையைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம். மொத்தம் எட்டுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்கள், திரையரங்குகள் போன்ற அதிக மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் இவை அமைக்கப்படும் என்றும் இவை தவிர மேலும் பல இடங்களில் இந்தக் கூடம் அமைக்கப்படும் என்று இதய அறநிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் டெரன்ஸ் சுவா தெரிவித்தார்.