கடைக்காரர்களிடம் நிர்வாகிகள் கட்டணங்கள் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும்

கடைக்காரர்களிடம் நிர்வாகிகள் கட்டணங்கள் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும்

1 mins read
12e5d0e5-bf53-4733-bc9f-9230ff849b32
-
Google News Preferred Icon

உணவங்காடி நிலையங்களை நிர் வகிக்கும் தனியார் நிறுவனங்கள் இனி தங்கள் நிர்வாகத்தின்கீழ் கடை திறக்க விரும்பும் கடைக்கா ரர்களிடம் வாடகை மற்றும் செய லாக்கக் கட்டணங்களைத் தெரி வித்த பின்னரே ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற வேண்டும் என்று சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத் தில் பேசினார். ஒப்பந்தக் காலத்தின்போது இக்கட்டணங்களில் இவர்கள் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படாது என்றும் கூறினார்.

கட்டணங்களில் ஒளிவு மறைவு ஏற்படாத வண்ணம் உணவங்காடி நிலையங்களை நிர்வகிக்கும் தனி யார் சமூகநல நிறுவனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றனவா என்று தொகுதியில்லா உறுப்பினர் டேனியல் கோ எழுப்பிய கேள் விக்கு டாக்டர் கோ பதிலளித்தார். கட்டணங்கள் தொடர்பில் நிறு வனங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் நாண யம் மாற்றுவது போன்ற தேசிய சுற்றுப்புற அமைப்பின் ஒப்புதலுக்கு உட்பட்ட விருப்பச் சேவைகளுக்கும் அது பொருந்தும் என்று திருவாட்டி கோ விளக்கினார்.

இதனால் நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய லாபங்களைக் கட் டுப்படுத்தவும் முடியும்; கடைக்காரர் களுக்கு வாடகை மலிவாகவும் அமையும் என்றார். இன்றுள்ள புதிய உணவங்காடி நிலையங்களின் வாடகை மற்றும் கடையை இயக்கும் கட்டணத்தை ஒப்பிடுகையில் உணவங்காடிகள், காப்பிக் கடைகளைவிட குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவே உள் ளது என்று அவர் தெரிவித்தார்.