கோ: அதிவேக ரயில் திட்டம் ஒத்திவைப்பு இரு நாடுகளுக்கும் நியாயமான ஏற்பாடு

கோ: அதிவேக ரயில் திட்டம் ஒத்திவைப்பு இரு நாடுகளுக்கும் நியாயமான ஏற்பாடு

2 mins read
95be89e0-b3e2-4787-bdc3-93c46f57273c
-

இரு நாடுகளுக்குமிடையிலான அதிவேக ரயில் திட்டத்தை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க கையெழுத்தான உடன் பாடு சிங்கப்பூருக்கும் மலேசியாவுக் கும் ஏதுவான 'நியாயமான ஏற் பாடு' என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த மாதம் 5ஆம் தேதி கையெழுத்தான உடன்பாடு, சிங் கப்பூரின் நலன்களைப் பாதுகாப் பதுடன் மலேசியாவின் வேண்டுகோளையும் நியாயமான அளவில் நிறைவேற்றுவதாக இருந்தது என் றும் அமைச்சர் கூறினார்.

மேலும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நம் இருதரப்பு உறவைக் கொண்டு நமக்கி டையே உள்ள விவகாரங்களை உடன்பாடுகள் மூலமாகவும் அனைத்துலகச் சட்டம் மூலமாக வும் தீர்த்துக்கொள்ள முடியும் என் பதைக் காட்டுகிறது என்று திரு கோ சொன்னார். கடந்த மாதம் 5ஆம் தேதி உடன்பாட்டின்படி, 2020ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி வரை இத்திட்டத்தை ஒத்திவைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

மேலும் திட்டம் ஒத்திவைக்கப் பட்டதன் தொடர்பில் மலேசியா, சிங்கப்பூருக்கு $15 மில்லியனை இழப்பீட்டுத் தொகையாகக் கொடுக்கும். இந்தத் தாமதத்தால், 2026ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கவிருந்த அதிவேக ரயில் திட்டம், 2031ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கும். 2016ல் செய்துகொண்ட முன் னைய உடன்பாட்டில் திட்டத்தை ஒத்திவைக்கும் எந்த விதியும் இடம்பெறவில்லை. "திட்டத்தை ஒத்திவைக்கும் வேண்டுகோளை நிராகரித்து, எங் கள் சட்ட உரிமையைக் கொண்டு உடன்பாட்டு விதியை மீறியதற்காக மலேசியாவிடமிருந்து அதிக இழப் பீட்டு தொகையைப் பெற்றிருக்க லாம். "ஆனால், இருதரப்பு ஒத்து ழைப்பை முன்னிறுத்தி, இரு நாடு களும் மாற்றுத் தீர்வு பற்றி பேசி, இரண்டு ஆண்டுகளுக்குத் திட் டத்தை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, மலே சியா மூன்று முதல் நான்கு ஆண் டுகள் வரை ஒத்திவைப்பு காலத்தைக் கேட்டது," என்றும் திரு கோ விவரித்தார்.