இல்ல மேம்பாட்டுத் திட்ட இரண் டாம் கட்டத்தின்கீழ் 60லிருந்து 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீவக வீடுகள் தகுதி பெறுகின்றன. இவற்றில் வாடகை வீடுகளும் அடங்கும். தற்போது இதே திட்டத்தின் முதற்கட்டம் மூலம் பலனடைந் துள்ள வீடுகள் போலவே இரண் டாம் கட்டத்தின் கீழும் பலர் பலனடைவார்கள் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நேற்று மன்றத்தில் தெரி வித்தார். இத்திட்டத்தின் இரண் டாம் கட்டம் இன்னும் பத்தாண்டு களில் தொடங்கவுள்ளது. இத்திட்டம் பற்றி மொத்தம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர்களுள் ஒருவரான பாட் டாளிக் கட்சித் தலைமைச் செயலா ளர் பிரித்தம் சிங், முதிர்ச்சியடையும் கட்டடங்களின் சிதைவை மெதுவடையச் செய்ய வீவக சில தொழில்நுட்பங்களைப் பயன் படுத்தலாம் என்று ஆலோசனை கூறினார். இல்ல மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வீடுகள் மறுபடி யும் சில ஆண்டுகளுக்குப்பின் 'வெர்ஸ்' திட்டத்தின்கீழ் மறுமேம் பாடு காணும்போது தேவையற்ற செலவுகள் ஏற்படுவதைக் குறித்து பீஷான்=-தோ பாயோ குழுத் தொகுதி உறுப்பினர் சொங் கீ ஹியோங் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த திரு வோங், இரு திட்டங்களுக்காகவும் அரசாங்கம் பொதுமக்கள் நிதியி லிருந்து வீண் செலவு செய்யாது என்று கூறினார்.
'வெர்ஸ்' இன்னும் இருபது ஆண்டுகளில் தொடக்கம் காணும். இதற்காக வழங்கப்படும் இழப்பீடு, கட்டாய மறுமேம்பாடு பெறும் வீவக வீடுகளுக்கான ஒட்டுமொத்த மறுமேம்பாட்டுத் திட் டத்தைக் காட்டிலும் குறைவானதே. வீடுகளின் மதிப்பு, விலை குறித்த நுணுக்கமான தகவல் களைப் பற்றி மேலும் ஆலோசிக்க வேண்டும் என்றும் வெர்ஸ் திட்டம் நீண்ட காலத்திற்கு நிதி நிலைத் தன்மை பெறும் முறையில் அமல் படுத்தப்பட வேண்டும் என்றும் திரு வோங் கூறினார். முதிர்ச்சியடையும் வீடுகளுக்கு, பராமரிப்புப் பணிகளை மேற் கொள்வதில் நாட்டம் செலுத்தும் ஹிப்-=II திட்டம், நிதி நிலைத் தன்மையையும் கட்டுமானத் துறை யின் திறனையும் கருத்தில் கொண்டு பணிகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.

