தவறான மருந்து விவரங்கள்: மனிதத் தவறே இதற்குக் காரணம்

தவறான மருந்து விவரங்கள்: மனிதத் தவறே இதற்குக் காரணம்

1 mins read
20ca96d8-b3a4-4b7c-aacb-a019617291e4
-

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியன்று 100க்கு மேற்பட்ட மருந்தகங்களில் நோயாளிகளுக்குக் கொடுக்கப் பட்ட மருந்துகளில் தவறான பெயர்களும் அவை உட்கொள் ளப்பட வேண்டிய விவரங்கள் தவறாக அச்சிடப்பட்டதற்கும் காரணம் மனித தவறுதான் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால் 800க்கு மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்ட னர். அந்த நோயாளிகளைச் சம்பந்தப்பட்ட மருந்தகங்கள் அணுக்கமாகக் கண்காணித்து வந்ததில் அவர்களுக்கு எவ்வித உடல்நிலை கோளாறும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்பக் குத்தகையாளர் தனது 'ஜிபிகொனக்ட்' கணினிக் குறியீட்டில் சில மாற்றங்கள் செய்ததால், மருந்துகளுக்கான தகவல் குறிப்பில் தவறான தகவல்கள் அச்சிடப்பட்டன. இருப்பினும், நோயாளி களுக்குச் சரியான மருந்துகள்தான் விநியோகம் செய்யப்பட் டன என்று அமைச்சர் விளக்கினார்.

இச்சம்பவத்துக்குப் பிறகு 'ஜிபிகொனக்ட்' கணினிக் குறியீட்டில் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்றும் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்கும் வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது என்றும் டாக்டர் லாம் விவரித்தார்.