ஜூரோங் வட்டார எம்ஆர்டி பாதை: பத்து ஆண்டு செயல்முறை காலம் அவசியம்

ஜூரோங் வட்டார எம்ஆர்டி பாதை: பத்து ஆண்டு செயல்முறை காலம் அவசியம்

1 mins read
2c87b151-b7dc-48fe-8b22-df1fb514650f
-

ஜூரோங் வட்டார எம்ஆர்டி பாதை ஒரு சிக்கலான திட்டம் என்பதால், அதன் பாதுகாப்பு, கட்டுமானத்தின் தரம் ஆகியவற்றை உறுதிசெய்யும் பொருட்டு அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பத்தாண்டு செயல்முறை காலக்கெடு அவசியமானது என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார்.

முதலில், இந்த 24 கிமீ பாதை நெடுகிலும் பல உயர் மின்சாரக் கம்பிவடங்களும் பெரிய குழாய்களும் ஓடுவதால், பாதையின் கட்டுமானம் தொடங்குவதற்கு முன் அவை வழிமாற்றி விடப்பட வேண்டும். இரண்டாவதாக, இந்தப் பாதை நெடுகில் ஜூரோங் ஈஸ்ட், சுவா சூ காங், பூன் லே ஆகிய சந்திப்பு நிலையங்களும் இருப்பதால், அவற்றுடன் புதிய பாதை சமூகமாக இணைய வேண்டும் என்றும் அமைச்சர் கோ தெரிவித்தார்.