வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சுமார் 30 திருத்தங்கள் நேற்று மன்றத் தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கலவரங்கள், தீ, வெள்ளம் ஆகிய காரணங்களால் தேர்தல் நடைமுறைகளை இரண்டு மணி நேரம் வரை தாமதப்படுத்த தேர்தல் அதிகாரிக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும். வேட்பாளர்கள் மின்னியல் முறையில் தங்கள் தேர்தல் வைப்புத்தொகையைச் செலுத்தலாம் என்பதும் தேர்தல் அதிகாரி அனுமதித்தால் மட்டுமே வேட்பாளர்கள் வைப்புத்தொகையை ரொக்கமாகச் செலுத்த முடியும் என்பதும் மற்ற திருத்தங்கள். தற்போது அனுமதிக்கப்படும் வங்கிப் பத்திரம், காசோலை ஆகியவையும் தொடர்ந்து அனுமதிக் கப்படும் என்று பிரதமரின் சார்பில் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் விளக்கினார். தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், வெளிநாட்டினர், நொடித்துப் போனவர்கள் ஆகியோர் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படாததும் திருத்தங்களில் ஒன்றாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
1 mins read

