பிடோக்கில் பள்ளிப் பேருந்து மீது எஸ்பிஎஸ் பேருந்து மோதிய சம் பவத்தில் பத்து வயது சிறுவன் உட்பட இருவர் காயம் அடைந் தனர். பிடோக் ரோடு-பிடோக் பிளேஸ் சந்திப்பில் நேற்று காலை விபத்து நிகழ்ந்தது. காலை 6.01 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் கூறிய காவல்துறையினர் சம்பவ இடத் துக்கு விரைந்தனர். ஃபேஸ்புக்கில் பதிவேற்றப் பட்ட காணொளியில் எஸ்பிஎஸ் பேருந்தின் முன்பக்கம் மிக மோசமாக சேதமடைந்திருப்பதைக் காண முடிந்தது.
முன்பக்க கண்ணாடி முழுமையாக உடைந்திருந்தது. பேருந்து சேவை எண் 55 என் பதையும் காணொளி காட்டியது. விபத்தில் சிக்கிய பேருந்து சாலையின் குறுக்கே நின்றதால் சாலையில் இருந்த மற்ற வாகனங்கள் சாலையோரமாக ஒதுங்க வேண்டியிருந்தது. விபத்தில் சாலை வழிகாட்டி கம்பம் ஒன்றும் வளைந்து கிடந் தது. சம்பவத்தின்போது பள்ளி பேருந்து நகராமல் நின்று கொண் டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த எஸ்பிஎஸ் பேருந்து உடனடியாக நிறுத்த முடியாமல் பள்ளி பேருந்து மீது மோதியதாக அறியப்படுகிறது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 36 வயது பேருந்து ஓட்டுநர், சாங்கி பொது மருத்துவமனை யிலும் பத்து வயது சிறுவன், கேகே தாய்சேய் நல மருத்துவமனை யிலும் சேர்க்கப்பட்டதாக காவல் துறையினர் கூறினார். இருவரும் அப்போது சுய நினைவுடன் காணப்பட்டனர். காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
பள்ளி பேருந்து மீது எஸ்பிஎஸ் பேருந்து மோதியதாகக் கூறப்படும் விபத்தில் பத்து வயது சிறுவன் காயம் அடைந்தான். படம்: அலேக்ஸ் டான் (ஃபேஸ்புக்)

