'சிறந்த நகர வடிவமைப்பு அவசியம்'

'சிறந்த நகர வடிவமைப்பு அவசியம்'

1 mins read
e70b97cf-4b25-408a-ac29-42856f8cf2c6
-

சிங்கப்பூர் அதன் நகர வடி வமைப்பை மேம்படுத்துவதில் புத்தாக்கமான தாக்குப்பிடிக்கக் கூடிய வழிகளை தொடர்ந்து கண்டறிய வேண்டும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் கேட்டுக் கொண்டார். குடியிருப்பு, தொழில்துறை, பொழுதுபோக்கு, மக்களுக் கான வசதிகள் ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை யில் சிங்கப்பூரில் நிலப்பற்றாக் குறை உள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மெரினா பே சாண்ட்சில் நடைபெற்ற கட்டடக்கலை, கட்டுமான சேவைகள் மாநாட் டில் அவர் பேசினார். "ஆசியாவின் வளர்ச்சி காரணமாக நகரமயமாக்கல் துரிதமாக நடந்துவருகிறது. இதனால் உள்கட்டமைப்பு, கட்டடங்களுக்கான தேவை களும் அதிகரித்து வரு கின்றன," என்று அமைச்சர் ஹெங் சொன்னார். "சிங்கப்பூரில் வாய்ப்புகள் அதிகரித்து வந்தாலும் சிங்கப் பூருக்கு அப்பால் ஆசியான், ஆசியா மற்றும் உலகின் இதர பகுதிகளின் புதிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசியாவின் வளர்ச்சியால் நகரமயமாக்கல் அதிகரிக்கும் என்று அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்