அரசாங்க சேவைகளை மின்னியல் முறையில் வழங்கும் செயலிகளை உருவாக்க எதிர்காலத்தில் சிரமம் இருக்காது. காரணம், அனைத்து அரசு அமைப்புகளையும் உள்ளடக்கி செயலிகளை உருவாக்குவதற் காகவே பொதுவான மென்பொருள் வடிவமைப்பு தளம் விரைவில் அறி முகமாகவிருக்கிறது. மேலும் அர சாங்கத்தின் கணினி கட்டமைப் புகளும் அடுத்த சில ஆண்டுகளில் மேக கணினி முறைக்கு மாற்றப் படவிருக்கிறது. பிரதமர் லீ சியன் லூங் நேற்று இதனை தெரிவித்தார். "அரசாங்க மென்பொருள், செயலிகளை உருவாக்கும் அடிப் படை முறையையே மாற்ற விரும்பு கிறோம்," என்றார் அவர்.
'GovTech' எனும் சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப முகவை நேற்று ஏற்பாடு செய்த மென் பொருள் நிபுணர்கள் மாநாட்டில் அவர் பேசினார். எதிர்காலத்தில் ஒவ்வோர் அர சாங்க அமைப்புகளும் உரிமங் களை வழங்கும் சேவைகளையும் இணையப் படிவங்களையும் தனித் தனியாகப் பெற்றிருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதற்குப் பதிலாக செயலிகளை உருவாக்குவதற்கான மென் பொருள்கள் அடங்கிய 'எஸ்ஜி டிஎஸ்' எனும் சிங்கப்பூர் அரசாங்க தொழில்நுட்ப அடுக்குகள் இவ் வாண்டில் படிப்படியாக அரசாங்க அமைப்புகளில் அறிமுகப்படுத்தப் படும். இதனால் குறைவான செலவில் அதே சமயத்தில் அதிவேகத்தில் மின் சேவைகளை வழங்கும் செய லிகளைத் தயாரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய முறையின் கீழ் அரசாங்கத்தின் மின் சேவை செயலிகளை உடனடியாக குறைவான செலவில் உருவாக்க முடியும் என்று பிரதமர் லீ கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

