சிங்கப்பூரில் ஃபேஸ்புக் நிறுவன மும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து புதிய தொழில் நிலையம் ஒன்றைத் தொடங்கியுள் ளது. 'சிங்கப்பூர் புதிய தொழில் நிலையம்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஆறு மாத இலவச பயிற்சி வழங்கப்படும். தொழிற்துறைத் தலைவர்களின் ஆலோசனைகள், குறுகியகால பயிற்சி, சேர்ந்து வேலை செய்வதற் கான இடம் ஆகியவற்றை ஆறு மாத பயிற்சி உள்ளடக்கியிருக்கும். அடுத்த பிப்ரவரியில் தொடங் கும் பயிற்சிக்கு இப்போது முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று ஃபேஸ் புக்கும் ஆணையமும் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. புதிய தொழில் நுட்பங்கள் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்தும் வழிகளை அறிவது பயிற்சியின் நோக்கம் என்றும் அவை குறிப்பிட்டன.
ஆறு மாதப் பயிற்சியில் புதிய முதலீட்டாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி ஆணையத்தின் புதிய யோசனைகளைச் செயல்படுத்த உதவும் வசதிகளையும் பயன் படுத்த அனுமதிக்கப்படும். ஃபேஸ்புக்கின் ஆசியானுக் கான பொதுக் கொள்கை பிரிவின் தலைவர் ஆல்வின் டான், "ஆணையத்தின் ஒத்துழைப்புடன் சிங்கப்பூர் புதிய தொழில் நிலையத் துக்காக புதிய நிறுவனங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை எங்களால் வழங்க முடியும்," என்றார்.

