'குறுந்தகவல் வந்தால் எச்சரிக்கை தேவை'

'குறுந்தகவல் வந்தால் எச்சரிக்கை தேவை'

1 mins read
48c67883-5e8c-491c-8aeb-488bcaa0b69f
-
Google News Preferred Icon

வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டு குறுந்தகவல் வந்தால் எச்சரிக்கையாக செயல்படும்படி காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். வங்கிக் கணக்கு வைத் திருக்கும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து இத்தகைய பொய்த் தகவல்கள் அனுப்பப்படு வதாக நேற்று வெளியிட்ட அறிக் கையில் காவல்துறையினர் கூறினர். கடந்த மாதம் 27ஆம் தேதிக் கும் 30ஆம் தேதிக்கும் இடைப் பட்ட காலத்தில் போலி குறுந் தகவல் வந்துள்ளதாக வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன என்று அறிக்கை தெரிவித்தது. பொய்யான குறுந்தகவல் மூலம் வாடிக்கையாளர்களை சிக்க வைத்து போலியான இணையப்பக்கங்கள் வழியாக அவர்களுடைய வங்கிக் கணக் குப் பற்றிய விவரங்கள் பெறப்படு கின்றன.

இணையம் வழி செயலிழந் துள்ள வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்படுவதற்கான வழிகளைத் தெரிவித்து அந்த குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. அதைப் பின்பற்றி சில வாடிக் கையாளர்கள் போலி இணையப் பக்கங்களில் வங்கி விவரங்களை தெரிவித்து விடுகின்றனர். உங்களுடைய வங்கிக் கணக்கில் சந்தேகமான முறையில் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படியும் காவல்துறையினர் அறிக்கையில் வலியுறுத்தினர். வங்கிகளுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துவதற்கு முன்பு பொய்யான குறுந்தக வலுக்கு பதில் அளிக்க வேண் டாம் என்றும் பயனீட்டாளர் பெயர், மறைச்சொல் ஆகிய வற்றை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.