காந்தி அஞ்சல்தலைகள் சிங்கப்பூரில் வெளியீடு

காந்தி அஞ்சல்தலைகள் சிங்கப்பூரில் வெளியீடு

2 mins read
8085fb70-4864-4f57-8e44-be07b8bf04a2
-

இர்ஷாத் முஹம்மது

மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் வன்முறைக்கு எதிரான அவரது கொள்கை களையும் இளைய தலைமுறை யினரிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சிங்கப்பூருக் கான இந்தியத் தூதர் ஜாவத் அஷ்ரஃப் தெரிவித்துள்ளார். பல சமயங்களுக்கிடையே பதற்றநிலை ஏற்பட்ட நிலையிலும் காந்தி தமது சிந்தனையில் தெளி வாக இருந்ததோடு தமது கொள் கைகளில் வலுவாகவும் நிலை யாகவும் இருந்தார் என்று திரு ஜாவத் குறிப்பிட்டார். காந்தியடி கள் சிங்கப்பூருக்கு வந்தது இல்லை என்றாலும் அவரது கொள்கைகளைப் பின்பற்றுபவர் கள் இங்கு அதிகம் உள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவின் சுதந்திர தந் தையாகவும் அமைதியின் உருவ மாகவும் போற்றப்படும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் நேற்று உலகின் பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரில் நேற்று மாலை சன்டெக் சிட்டி மாநாட்டு மண்ட பத்தில் நடைபெற்ற கொண்டாட் டத்தில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் காந்தியின் படம் பொறிக்கப்பட்ட ஏழு அஞ்சல் தலைகள் வெளி யிடப்பட்டன. சன்டெக் அரங்கின் முதல் தளத்தில் மிகப்பெரிய காட்சித் திரையில் காந்தியைப் பற்றிய நான்கு நிமிட காணொளி காட்டப்பட்டது.

காந்தி மறைந்த பிறகு அவரது அஸ்தியின் ஒரு பகுதி மலாயா விற்குக் கொண்டு செல்லப்பட்டு பல இடங்களில் ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும் பின்னர் சிங்கப்பூரின் விக்டோரியா அரங் கில் அந்த அஸ்தி மூன்று நாள் பொதுமக்கள் மரியாதைக்காக வைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் கிளிஃபோர்ட் பியர் பகுதியில் கடலில் கரைக்கப்பட்ட தாகவும் குறிப்பிட்ட இந்தியத் தூதர், இதன்மூலம் சிங்கப்பூருக் கும் இந்தியாவுக்கும் இடையி லான பந்தத்தின் நெருக்கத்தை அறியலாம் என்றார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா தொடர்பில் சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற காணொளிக் காட்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்