வீட்டுரிமையாளர்கள் பல இன ஒருங்கிணைப்புக் கொள்கை கார ணமாக விற்க இயலாத வீவக வீடுகளை வாங்கும் திட்டம் எது வும் அரசாங்கத்திடம் இல்லை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளு மன்றத்தில் கூறினார். இன ஒருங்கிணைப்புக் கொள் கையின் விளைவால் வீட்டு விலைகள் மீது ஏற்படும் நெருக்கு தலைத் தவிர்ப்பதற்காக சீனர் அல்லாத வீட்டுரிமையாளர் களுக்கு உதவுவதன் தொடர்பில் மவுண்ட் பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் தெரிவித்த கருத்துகள் தொட்டு அமைச்சர் பதிலளித்தார்.
இன ஒற்றுமையையும் சமூகப் பிணைப்பையும் வலுப்படுத்தும் நோக்கில், பல இன மக்களும் சரிவிகித அளவில் வீவக பேட்டை களில் வசிப்பதை உறுதிசெய்யும் விதமாக 1989ஆம் ஆண்டில் இன ஒருங்கிணைப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையின்கீழ், ஒவ்வொரு வீவக புளோக்கிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் ஒவ் வோர் இனமும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வசிக்கலாம்.

