ஒரு முறை மட்டும் பயன்படும் தன்மையுடைய நெகிழிப் பைகளைப் பயன்படுத்தும்போது கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத் தில் நீ சூன் குழுத்தொகுதி உறுப்பினர் லூயிஸ் இங் கூறினார். 'மினிசோ' கடை சென்ற ஆண்டு முதல் ஒரு நெகிழிப் பைக்குப் பத்து காசு கட்டணம் செலுத்தும் திட்டத்தைத் தொடங் கியதிலிருந்து, நெகிழிப் பையின் பயன்பாட்டை 75% குறைத்துவிட்ட தாக அவர் சுட்டினார். நெகிழியின் பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயங்கள் குறித்தும் திரு இங் பேசினார். நிலம், நீர் தூய்மைக்கேட்டைக் குறைக்கும் முயற்சியில் சிங்கப்பூர் நெகிழிக் கழிவுகளை எரியூட்டினாலும், இது பிரச்சினையின் வேரைக் களை வதற்கான முடிவு இல்லை என்றார்.
பொதுமக்கள் சொந்தமாகத் தங்களின் மறுபயனீட்டுப் பைககளைப் பொருள் வாங்க கொண்டு வரும்போது அது போன்ற ஒரு பை, 125 நெகிழிப் பைகள் கழிவு களாவதைத் தடுக்கும் என்றார். பொருட்கள் வாங்கும்போது நெகிழிப் பைகள் இலவசமாகத் தரப்பட்டாலும், நெகிழிப் பைகளைப் பணம் கொடுத்து வாங்கும் வியாபாரிகள் அச்செலவை ஈடு கட்ட பொருட்களின் விலையை உயர்த்துகிறார்கள் என்றும் வாடிக் கையாளர்கள் நெகிழிப் பைகளுக்கு இறுதியில் கட்டணம் செலுத்த நேரிடுகிறது என்றும் திரு இங் வாதிட்டார்.
திரு இங் கூறியதன் தொடர்பில் பேசிய சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர், நாடளவில் ஏற்படுத்தப் பட்டு வரும் விழிப்புணர்வு குறித்து விவரித்தார். கூட்டங்களின்போது நெகிழித் தண்ணீர்ப்புட்டிகளைத் தருவது போன்ற சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் தம் அமைச்சு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். நிறுவனங்கள் பொருட்களைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்தும் மூலப்பொருள், அதன் அளவு ஆகியவை பற்றி 2020க்குள் தெரிவிப்பது, பொட்டலம் கட்டும் வர்த்தகங் களுக்கு ஒரு குறிப்பிட்ட கழிவுப் பொருள் சேகரிப்பு இலக்கை விதிப்பது போன்ற முயற் சிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்ப தாக டாக்டர் கோர் கூறினார்.
பொருட்கள் வாங்க நெகிழிப் பைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

