குற்றவியல் தண்டனைச் சட்டப்படி 377ஏ பிரிவில் வழக்குத் தொடர அரசு வழக்கறிஞருக்கு இருக்கும் அதிகாரத்தை அரசு நீக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை என்று தலைமைச் சட்ட அதிகாரி திரு லூசியன் வோங் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரிகளான பேராசிரியர் வால்டர் வூன், திரு வி.கே.ராஜா இருவரும் அண்மையில், இந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத்தொடர வேண்டாம் என்று அரசாங்கமோ நாடாளுமன்றமோ அரசு வழக்கறிஞர்களிடம் கூறுவது சரியாக இருக்காது என்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.
'337ஏ'வில் அரசு வழக்கறிஞரின் அதிகாரம் குறைக்கப்படவில்லை
1 mins read

