ஸ்டார்ஹப் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

ஸ்டார்ஹப் நிறுவனத்தில் ஆட்குறைப்பு

1 mins read
0f6d8a87-d5e7-4736-ac11-e47cdb9bab36
-

ஸ்டார்ஹப் நிறுவனம் 300 முழுநேர ஊழியர்களை இம்மாத இறுதியில் பணிநீக்கம் செய்யவுள்ளது. பொதுவாக வாடிக்கையாளர் தொடர்பு சாராத பதவிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக அது நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. முக்கிய உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தத் தொலைபேசி நிறுவனம் புதிய வர்த்தகங்கள், வாடிக்கையாளர் மின்னிலக்க சேவைத் திட்டங்கள் கம்பியில்லா மற்றும் கண்ணாடியிழை சேவைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தும். இணையப் பாதுகாப்பு, வாடிக்கையாளர் பராமரிப்பு போன்ற துறைகளில் அதிக ஊழியர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் நிறுவனம் கூறியது.