போலி மிரட்டல்; ஆடவருக்கு அபராதம்

போலி மிரட்டல்; ஆடவருக்கு அபராதம்

1 mins read
b82e05bd-ef3b-477b-bf78-46fdc23f4f98
-

கையில் எடுத்துச் செல்லும் பெட்டியை விமான இருக்கைக்கு மேலே வைக்க இடமில்லாமல் போனதால் அதை சரக்குப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என விமானப் பணியாளர் கூறியதால் அதிருப்தி அடைந்த ஸ்கூட் விமான பயணி ஒருவர், அந்தப் பையில் வெடிகுண்டு வைத்திருந்ததாகப் பொய்யுரைத்தார். அவர் உடனே அது ஒரு நகைச்சுவை எனக் கூறினாலும் விமான பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமளிக்க விரும்பாமல் நடவடிக்கை எடுத்தனர். தாய்லந்தின் ஹட் யாய் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம் சிங்கப்பூருக்குத் திருப்பப்பட்டது. சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் இரண்டும் உடன் செல்லவேண்டியிருந்தன. பின்னர் பையில் வெடிகுண்டு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. தொல்லை பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின்கீழ் ஹ்சு சுன் மெங் மீது $4,500 அபராதம் விதிக்கப்பட்டது.