பாட்டாளிக் கட்சியினர் மீது வழக்குகள்

பாட்டாளிக் கட்சியினர் மீது வழக்குகள்

1 mins read
e825a432-c319-4765-8551-18fbe4c69e31
-
Google News Preferred Icon

பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த மூன்று நகரமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை வெள்ளிக்கிழமை தொடங்கும். கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங், தற்போதைய தலைவர் சில்வியா லிம், தலைமைச் செயலாளர் ப்ரிதம் சிங் ஆகியோர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்படுவர். அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த இவர்கள் மீது அல்ஜுனிட் -ஹவ்காங் நகர மன்றம், சுயேட்சை விசாரணைக்குழுவின் பரிந்துரையின்படி வழக்கு தொடுத்துள்ளது.

பாசிர் ரிஸ்-பொங்கோல் நகர மன்றத்திடமிருந்து இவர்கள் மற்றொரு வழக்கையும் எதிர் நோக்கு கின்றனர். எஃப்எம்எஸ்எஸ் என்ற அமைப்புக்கும் மற்றொரு நிறுவனத்திற்கும் $33 மில்லியன் கொடுக்கப் பட்டது குறித்து இந்த வழக்குகள் முன் வைக்கப்பட் டுள்ளன. 2011ஆம் ஆண்டு ஜூலைக்கும் 2015ஆம் ஆண்டு ஜூலைக்கும் இடையே இந்த இரண்டு அமைப்புகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

இவ் வளவு பணம் எதற்காகக் கொடுக்கப்பட்டது என்றும் தவறாகக் கொடுக்கப்பட்ட பணத்தை நாடாளுமன்ற உறுப் பினர்கள் திரும்பத் தர வேண்டும் என்றும் அல்ஜுனிட் ஹவ்காங் நகர மன்றம் தெரி வித்தது. நகர மன்ற உறுப் பினர் களின் இந்த முடிவால் "இழப்பும் சேதமும்" ஏற்பட்டதாக பாசிர் ரிஸ்- பொங்கோல் நகர மன்றம் தெரி வித்தது. நம்பிக்கை அடிப்படையிலான கடமைகளை மீறும் வகையில் தாங்கள் நடந்துகொள்ளவில்லை என்று இந்த மூவர், கடந்த ஜூலையில் தெரிவித்தனர்.